லாரி மோதிய மோட்டார் சைக்கிளோட்டி பலி!

- Sangeetha K Loganathan
- 12 Jun, 2025
ஜூன் 12,
லாரியை மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 40 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று மாலை 5.30 மணிக்கு விபத்து குறித்தானத் தகவல் கிடைக்க பெற்றதும் சம்பவ இடைத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாகச் சபா மாநில மீட்பு ஆணையம் தெரிவித்தது. 15 மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jalan Tuaran Bypass சாலையில் 8 டன் லாரிக்கடியில் சிக்கிய ஆடவர் 40 வயது உள்ளூர் அடவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் பொதுமக்களின் உதவியுடன் லாரிக்கடியில் சிக்கியிருந்த ஆடவரின் உடலை மீட்டதாகவும் விரைந்ததாகச் சபா மாநில மீட்பு ஆணையம் தெரிவித்தது. உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் லாரி ஓட்டுநரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang penunggang motosikal berusia 40 tahun maut selepas terlibat dalam kemalangan dengan lori 8 tan di Jalan Tuaran Bypass, Sabah. Mayat mangsa dikeluarkan oleh pasukan penyelamat dengan bantuan orang awam. Pemandu lori kini disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *