அதிரடியாக 8 கடைகளை மூடிய கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம்!

top-news
FREE WEBSITE AD

வம்பர் 15,

சுத்தமான கடைகள் என அடையாளம் காணப்பட்ட கடைகளில் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட சோதனையில் 8 கடைகள் மூடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை Bukit Kucing & Sungai Buloh பகுதிகளில் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (MPKS), உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீனத் துறை (KPDN), வணிக உரிமத் துறை ஆகிய 55 அரசு அதிகாரிகளுடன் 9 கடைகளைச் சேதனையிட்டதாகக் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலானக் கடைகளின் வணிக உரிமம் காலாவதியானதாலும் அரசு நிர்ணயித்த பொருள் விலைகளை மீறியிருப்பதாகவும் சோதனை நடவடிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாகக் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம்  தெரிவித்துள்ளது. உரிமமில்லாத 8 கடைகளை மூடியிருப்பதாகவும் கடையின் உரிமையாளருக்குச் சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கும் முன்னர் பொருளின் விலை கட்டுப்படுத்தப்பட்ட, அரசு நிர்ணயித்திருக்கும் விலையை மீறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *