30 அடியிலிருந்து தவறி கீழே விழுந்த ஊழியர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்!
- Shan Siva
- 04 Jul, 2026
ஈப்போ: ஈப்போ, தாசெக் தொழிற்பேட்டையில், சிமென்ட் தொழிற்சாலைக் கட்டிடத்திலிருந்து 30 அடியிலிருந்து கீழே விழுந்த
தொழிற்சாலை ஊழியர் ஒருவர்,
லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த 23 வயதான அந்த நபர், சேமிப்புக் கிடங்கிலிருந்து கூரை
மீது விழுந்து, பின்னர் தொழிற்சாலைக்
கட்டிடத்திற்குள் விழுந்ததில், அவருக்கு லேசான காயங்களும் சுளுக்கு மட்டுமே ஏற்பட்டதாக பேராக் தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறை, தெரிவித்தது.
பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



