போலிஸ் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளான இளம்பெண் ஓட்டுநர்!

top-news

ஏப்ரல் 3,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னிருந்த வாகனத்தையும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிஸ் வாகனத்தையும் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று மாலை LEKAS நெடுஞ்சாலையில் மாலை 6.29 மணிக்கு 25 வயது இளம் ஓட்டிச் சென்ற Proton Saga வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகச் சிரம்பான் மாவட்டத் துணைக் காவல் ஆணையர் Muhd Amrul Yazid Anuar தெரிவித்தார்.

25 வயது இளம்பெண் செலுத்திய Proton Saga வாகனம் 43 வயது பெண் ஓட்டி வந்த Perodua Alza வாகனத்தை மோதியதாகவும் நெடுஞ்சாலையில் ரோந்து பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்நிலைய ரோந்து வாகனமான Honda Civic வாகனத்தின் பின் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என சிரம்பான் மாவட்டத் துணைக் காவல் ஆணையர் Muhd Amrul Yazid Anuar உறுதியளித்தார்.

Sebuah kenderaan unit kereta peronda rosak selepas dirempuh dalam kejadian di Lebuhraya LEKAS, berhampiran Ampangan. Kemalangan berlaku akibat Proton Saga hilang kawalan lalu melanggar Perodua Alza sebelum merempuh MPV polis. Tiada kecederaan dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *