ரஃபிஸி மகன் தாக்கப்பட்டதற்கு நான் காரணமா?! - இஸ்மாயில் சப்ரி போலீஸில் புகார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 20: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், ரஃபிஸி ராம்லியின் மகன் மீதான தாக்குதலுடன் தன்னை தொடர்புபடுத்தும் ஒரு முகநூல் பதிவு தொடர்பாக காவல்துறை மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC யில் புகார்களை தாக்கல் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட முகநூல் பக்கம் மற்றும் அதன் நிர்வாகி அல்லது உரிமையாளர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க MCMC மற்றும் Facebook நிறுவனங்களிலும் ஒரு புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று முன்னாள் அம்னோ துணைத் தலைவருமான அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பதிவுகளின் உள்ளடக்கங்கள் “முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் தீங்கிழைக்கும் வகையில் தனது நற்பெயரை சேதப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்று இஸ்மாயில் கூறினார்.

முழுமையான விசாரணையை மேற்கொண்டு, முகநூல்  பக்கத்தின் உரிமையாளர் அல்லது நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட இடுகைகளைப் பரப்பும் எவருக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *