தொடரும் பகடிவதை! 6 MRSM மாணவர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 26, 

மலாக்காவில் உள்ள MRSM உயர்கல்விக் கூடத்தில் மாணவர் ஒருவர் பகடிவதைச் செய்யப்பட்ட நிலையில் சந்தேகத்திற்குரிய 6 MRSM மாணவர்களை இடைநீக்கம் செய்து கைது செய்யப்பட்டிருப்பதாக MRSM உயர்கல்விக்கூட இயக்குநர் Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். கடந்த வாரம் பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்த நிலையில் பகடிவதையில் ஈடுபட்ட படிவம் 5 பயிலும் 6 மாணவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாக Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். விசாரணையில் பகடிவதையில் ஈடுப்பட்டிருந்த 6 மாணவர்களையும் காவல்துறையின் மேல் நடவடிக்கைகாக ஒப்படைத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மனநலன் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மீண்டும் MRSM உயர்கல்விக்கூடத்திற்குத் திரும்பியதாகவும் Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.

பகடிவதையில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து மன்னிப்புக் கடிதம் பெற்றிருக்கும் நிலையில் அந்த கோரிக்கையை MRSM உயர்கல்விக்கூட ஒழுங்கு நடவடிக்கைக் குழு நிராகரித்ததாகவும் நாட்டின் எந்தவொருல் MRSM உயர்கல்விக்கூடத்திலும் அவர்கள் கல்வியைத் தொடர முடியாது என்றும் அதன் இயக்குநர் Datuk Asyraf Wajdi Dusuki வலியுறுத்தினார். MRSM உயர்கல்விக்கூடத்தின் புதிய கொள்கையான You Touch You Go எனும் கொள்கையின் அடிப்படையில் பகடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் உடனடியாகத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் மீதானக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நிரந்தரமாக MRSM உயர்கல்விக்கூடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் Datuk Asyraf Wajdi Dusuki நினைவூட்டினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *