முன்னாள் ராணுவ & காவல் அதிகாரிகள் வார்டன்களாக நியமனம்! – MRSM

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 13, 

மாரா உயர்கல்விக் கூடத்தில் பகடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்தவும் அவர்களின் பாதுகாப்பை நிலைநிறுத்தவும் MRSM மாணவர் தங்கும் விடுதிகளின் வார்டன்களாக முன்னாள் ராணுவ அதிகாரிகளையும் முன்னாள் காவல் அதிகாரிகளையும் நியமிப்பதாக மாரா உயர்கல்விக் கூடங்களின் தலைமை இயக்குநர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். அதன் முதற்கட்டமாக 7 முன்னாள் காவல் அதிகாரிகளைப் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.

திரங்கானு , பினாங்கு ஆகிய 2 மாரா உயர்கல்விக் கூடங்களில் முதற்கட்டமாகப் புதிய வார்டன்களை நியமித்திருப்பதாகவும் ஆண்கள் மட்டுமின்றி பெண் வார்டன்களும் நியமிக்கப்படவிருப்பதாகவும் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். மாணவர்களிடையிலான பகடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க இம்மாதிரி கடுமையான சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருப்பதையும் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். நியமிக்கப்பட்டிருக்கும் புதிய வார்டன்களுக்கும் கட்டுப்பாடுகள் இருப்பதை Datuk Dr Asyraf Wajdi Dusuki சுட்டிக்காட்டினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *