மலாய் சமூகத்திற்காக அம்னோ பெர்சத்து இணைந்து செயல்பட 17 மலாய் அமைப்புகள் வேண்டுகோள்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 23,

மலாய்க்காரர்களின் நலனைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக அம்னோவும் பெரிக்காத்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என 17 மலாய் அமைப்புகள் ஒன்று சேர்ந்து வலியுறுத்தினர். இன்று காலை அம்னோ தலைமையகத்தில் 17 மலாய் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவரான Syed Hassan Syed Ali அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr. Asyraf Wadi Dusuki உடனான சந்திப்பில் இதை வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றதாக மலாய் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவரான Syed Hassan Syed Ali தெரிவித்தார்.

அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ தனித்து போட்டியிடாமல் பெர்சத்துவுடன் இணைந்து போட்டியிட்டால் அது மலாய்க்காரர்களிடையே அரசியல் நம்பிக்கை வலுப்படுத்தும் என Syed Hassan Syed Ali தெரிவித்தார். அரசியல் வேற்றுமைகளால் அம்னோவும் பெர்சத்துவும் ஒன்றிணைய முடியாது என்றாலும் Muafakat Nasional எனும் மலாய்க்காரர்களின் நலன் உடன்படிக்கையில் பெர்சத்துவும் அம்னோவும் கையெழுத்திட்டு தேர்தலுக்குப் பின்னரான ஆட்சியில் Muafakat Nasional உடன்படிக்கையைச் செயல்படுத்த வேண்டும் என 17 மலாய் அமைப்புகள் விரும்புவதாக Syed Hassan Syed Ali தெரிவித்தார். 

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 16 ஆவது பொதுத்தேர்தலில் பி.கே.ஆர், டி.ஏ.பி, அமானா கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளாது என தாம் நம்புவதாக Syed Hassan Syed Ali தெரிவித்தார். பி.கே.ஆர் , டி.ஏ.பி கட்சிகள் மலாய்க்காரர்களின் நலனைப் பாதுகாப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் அவர்களுடன் அம்னோ கைக்கோர்த்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டாம் என்பதையும் 17 மலாய் அமைப்புகள் அம்னோவுக்கு வலியுறுத்தியதாக Syed Hassan Syed Ali தெரிவித்தார். தற்போதைய மடானி அரசாங்கத்தில் அம்னோ முன்னெடுத்துள்ள மலாய்க்காரர்களுக்கான முன்னெடுப்புகள் செயல்படுத்த தாமதமாகியிருப்பதாகவும் அதற்கு கூட்டணிக் கட்சிகள் முக்கிய காரணம் என்றும் Syed Hassan Syed Ali குற்றம்சாட்டினார். அம்னோவுக்கும் பெர்சத்துவுக்கும் ஒரே கொள்கை என்பதால் Muafakat Nasional உடன்படிக்கை மலாய்க்காரர்களுக்குப் புதிய நம்பிக்கையை விதைக்கும் என 17 மலாய் அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவரான Syed Hassan Syed Ali தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *