இன்றிரவு Syed Saddiq தலைமையில் MUDA கட்சிக் கூட்டம்!

- Sangeetha K Loganathan
- 25 Jun, 2025
ஜூன் 25,
RM 10 லட்சம் ரிங்கிட் ARMADA பணமோசடி சம்மந்தப்பட்ட வழக்கிலிருந்து மூடா கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான Syed Saddiq Syed Abdul Rahman விடுவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து இன்றிரவு மூடா கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டத்தை நடத்தவிருப்பதாக Puteri Wangsa சட்டமன்ற உறுப்பினரும் MUDA கட்சியின் இடைக்காலத் தலைவரும் Amira Aisya Abdul Aziz தெரிவித்தார்.
மூடா கட்சியின் தோற்றுநரான Syed Saddiq மீண்டும் மூடா கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பார் என தாம் நம்புவதாகவும் மூடா கட்சி Syed Saddiq-க்கு ஆதரவாக நிலைத்திருக்கும் என்றும் Amira Aisya Abdul Aziz உறுதியளித்தார். கடந்த 2023-இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் RM 10 லட்சம் ரிங்கிட் ARMADA பணமோசடி சம்மந்தப்பட்ட வழக்கில் Syed Saddiq குற்றவாளி என தீர்ப்பளித்ததும் நவம்பர் 9, 2023 இல் Syed Saddiq மூடா கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதும் மூடா கட்சியின் துணைத்தலைவரான Amira Aisya Abdul Aziz மூடா கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Selepas dibebaskan daripada kes penyelewengan dana ARMADA, MUDA akan mengadakan mesyuarat malam ini yang dipengerusikan oleh Syed Saddiq. Pemimpin sementara Amira Aisya menegaskan parti kekal menyokong beliau dalam menentukan hala tuju MUDA.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *