அடுத்தவர் நிலத்தில் கோயிலைக் கட்டினால் அது தகுதியான மதம் கிடையாது! பெர்லிஸ் MUFTI சர்ச்சை!

top-news

மார்ச் 27,

அடுத்தவர் நிலத்தில் ஒரு மதத்தினர் தங்களின் வழிபாட்டுத் தலங்களைக் கட்டினால் அந்த மதம் ஒரு மதமாக இருக்கவே தகுதியற்றது என பெர்சிஸ் MUFTI Datuk Dr. Mohd Asri Zainul Abidin கருத்து தெரிவித்துள்ளார். அப்படியான மத வழிபாட்டை எந்த கடவுள் ஏற்றுக் கொள்கிறார்? அப்படி ஏற்றுக்கொண்டால் அவர் கடவுளா என்றும், மசூதியும் கோயிலும் அருகருகே இருக்க வேண்டும் என கருத்துகள் தெரிவிப்பவர்கள் இஸ்லாத்தின் புனிதத்தைக் கெடுக்கிறார்கள் என்றும் பெர்சிஸ் MUFTI Datuk Dr. Mohd Asri Zainul Abidin தெரிவித்துள்ளார்.

உங்கள் மதத்தைப் பின்பற்ற அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பை முறையாகப் பயன்படுத்துங்கள். உங்கள் மதம் அடுத்தவர் நிலத்தை அபகரித்துக் கோயிலைக் கட்டி அந்த நிலத்தை உரிமை கொண்டாட சொல்லியிருந்தால் அது மதமே கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோயிலும் மசூதியும் அருகருகே இருந்தால் மதநல்லிணக்கத்திற்கான அடையாளம் என தெரிவிக்கப்படுவது அறிவற்ற வாதம் என்றும் அது இஸ்லாத்தை அசிங்கப்படுத்துவதற்குச் சமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Mufti Perlis, Datuk Dr. Mohd Asri Zainul Abidin, menyatakan bahawa membina rumah ibadat di tanah milik orang lain tidak mencerminkan agama yang sah. Beliau menegaskan bahawa konsep masjid dan kuil bersebelahan bukan simbol keharmonian tetapi boleh mencemarkan kesucian Islam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *