டீசல் மானியம் முறைப்படுத்தப்பட்டுள்ளதால் கடத்தல் நடவடிக்கை குறைந்துள்ளது! - இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா

top-news
FREE WEBSITE AD

 

கோலாலம்பூர், ஜூலை 23: இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானியம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, குறைந்தபட்சம் 6.5 மில்லியன் லிட்டர் டீசல் தொழிற்சாலைகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது அல்லது அண்டை நாடுகளுக்கு கடத்தப்பட்டது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

டீசல் மானியத்தை சீராய்வு செய்யப்பட்டதன் விளைவாக தீபகற்ப மலேசியாவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தினசரி விற்பனையில் 23 விழுக்காடு அல்லது 6.5 மில்லியன் லிட்டர் குறைந்துள்ளது என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

ஜூன் தொடக்கத்தில் சராசரி தினசரி டீசல் விற்பனை 28.6 மில்லியன் லிட்டராக இருந்தது, இது ஜூலை 2024 தொடக்கத்தில் 22.2 மில்லியன் லிட்டராகக் குறைந்தது.

அதே ஒப்பீட்டு காலத்தில் தினசரி வணிக டீசல் விற்பனை 4.8 மில்லியன் லிட்டர் அதிகரித்திருப்பதைக் காட்டும் தரவுகளால் கையாடப்பட்டது தெரியவருவதாக அவர் கூறினார்.

பெட்ரோல் நிலையங்களில் தற்போதைய விலை லிட்டருக்கு RM3 வெள்ளி 35 ஆக இருப்பதால், முன்பு மானிய விலையில் டீசலை வாங்கிய தொழிற்சாலைகள் இப்போது வணிக டீசலுக்கு மாறிவிட்டன என்று அவர் இன்று கூறினார்.

இந்த நடவடிக்கை அமலுக்கு வந்ததில் இருந்து வடக்கு தீபகற்ப மலேசியாவின் எல்லைக்கு அருகில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் டீசல் விற்பனை 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று அமீர் ஹம்சா தெளிவுபடுத்தினார்.

கடத்தல்காரர்களுக்கான லாப வரம்புகள் குறைவதால் அண்டை நாட்டிற்கு கடத்தல் நடவடிக்கைகள் குறைந்து வருவதை இந்த நிலைமை பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *