முகைதீன் பதவி விலகுவது பெரிக்காத்தானுக்கு நல்லது! பெரிக்காத்தான் MP வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 27,

பெர்சத்து கட்சியில் எடுக்கப்படும் ஒரு சில சுயநலமான முடிவுகள் அதன் கூட்டணியான பெரிக்காத்தானையும் பாதிக்கும் என்பதை முகைதீன் உணர வேண்டும் என பெரிக்காத்தானின் இந்திரா மாக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Saifuddin Abdullah தெரிவித்தார். முகைதீன் முன்பு போல இல்லை என்பதைத் தம்மால் உணர முடிகிறது என Datuk Saifuddin Abdullah தெரிவித்தார். கடந்த காலங்களில் முகைதீனுக்குள் இருந்த தலைமைத்துவம் இப்போது மழுங்கிவிட்டது என Datuk Saifuddin Abdullah குறிப்பிட்டார். 

பெர்சத்துவுக்குள் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் போது எந்தவொரு தரப்பினரும் பாதிக்கப்படமால் தீர்வுகள் வழங்க வேண்டும் என்பதை முகைதீன் மீறிவிட்டார். கடந்த ஓராண்டுக் காலமாகவே முகைதீன் அவரின் தலைமைப் பண்புகளை மெல்ல மெல்ல இழந்து வருவதைத் தாம் உணர்ந்திருப்பதாக Datuk Saifuddin Abdullah  தெரிவித்தார். அரசியல் கட்சியிலிருந்து ஒருத்தரை நாம் வெளியே அனுப்பினால், கட்சி 100 அடி பின் தங்கிவிடும் என்பதை முகைதீன் அறியாமல் பெர்சத்துவின் ஆளுமை மிக்க தலைவர்களை அவர் இழந்து வருவதாக Datuk Saifuddin Abdullah தெரிவித்தார். முகைதீனின் இம்மாதிரியான செயல்பாடுகளால் பெரிக்காத்தானின் கூட்டணி கட்சிகளும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை Datuk Saifuddin Abdullah சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *