விசாரணைக்கு ஒத்துழைக்க முகைதீனுக்கு நீதிமன்றம் உத்தரவு! RM 200 மில்லியன் நிதிமோசடி வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 7,

முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin மீதான நீதிமன்ற வழக்குகளைக் கைவிடுமாறு முகைதீனின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது. பிரதமராக இருந்த போது அரசு அதிகாரத்தை மீறியதாகவும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகவும் முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin மீதான் 7 குற்றச்சாட்டுகளின் விசாரணைக்கு முகைதீன் ஒத்துழைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் முகைதீன் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டபட்ட 7 வழக்குகளும் நவம்பர் 10 நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுமென உயர்நீதிமன்ற நீதிபதி K. Muniandy உத்தரவிட்டார். 

Tan Sri Muhyiddin Yassin பிரதமராக இருந்த போது Jana Wibawa திட்டத்தின் குத்தகைகள் தொடர்பாக Bukhary Equity Sdn Bhd, Nepturis Sdn Bhd, Mamfor Sdn Bhd ஆகிய நிறுவனங்களிடமிருந்து RM232.5 மில்லியன் நிதி பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2022 ஜூலை முகைதீனின் பெர்சத்து கட்சியின் இரு வங்கிகள் RM200 மில்லியன் பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டதாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த 200 மில்லியன் நிதி எங்கிருந்து பெறப்பட்டது என்கிற எந்தவோர் ஆதாரமும் இல்லாததால் முகைதீன் அரசு திட்டங்கள் மூலமாக இந்த நிதியைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *