முகைதீன் மருமகனின் வெளிநாட்டுச் சொத்துகள் முடக்கம்! – SPRM
- Thinagaren Sanggaren
- 29 Oct, 2025
அக்தோபர் 29,
முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassinனின் மருமகன் Datuk Seri Adlan Berhan தொடர்புடைய வெளிநாட்டுச் சொத்துகளை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியிருப்பதாக SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். அரசு நிதியைக் கையாடல் செய்த வழக்கின் விசாரணையின் போது சுமார் 145 மில்லியன் ரிங்கிட் நிதியை மோசடி செய்த வழக்குடன் முகைதீன் யாசினின் மருமகன் Datuk Seri Adlan Berhan தொடர்புடையவராக இருப்பதை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2023 Datuk Seri Adlan Berhan மலேசியாவிலிருந்து வெளியேறி New Zealandக்குத் தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருந்த நிலையில் interpol உதவியுடன் அவரைக் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடி வருவதாக SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். அண்மையில் பொது நிகழ்ச்சியில் அவர் தோன்றியதாக வெளிவந்த புகைப்படங்கள் பரவியதை அடுத்து வெளிநாடுகளில் முகைதீன் யாசினின் மருமகன் Datuk Seri Adlan Berhan தொடர்புடைய ஒரு சில வணிக வளாகங்களை interpol அடையாளம் கண்டிருப்பதாகவும் அது தொடர்பாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிறப்புப் படை அதிகாரிகள் ஆவணங்களைச் சேகரித்து வருவதாகவும் SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



