கோவிட்டிலிருந்து மலேசியாவை மீட்டது நான்! மறக்காதீர்! – முகைதீன் நினைவூட்டல்!
- Thinagaren Sanggaren
- 18 Jul, 2025
ஜூலை 18,
2020 இல் உலக நாடுகள் கோவிட்டால் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில் அப்போதை நாட்டின் பொருளாதாரத்தைக் காத்து வழிநடத்தியது நான் என்பதை அன்வார் மறக்க கூடாது என முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin நினைவூட்டினார். பெரிக்காத்தானுக்கு ஆட்சி நடத்த தெரியாது என முன்னதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் RAFIZI RAMLI தெரிவித்திருப்பது அபத்தமானது என்றும் கோவிட் காலத்தில் ரபீஸி என்ன செய்துக் கொண்டிருந்தார் எனும் கேள்வியும் Tan Sri Muhyiddin Yassin முன் வைத்தார்.
கோவிட்டின் போது உலகின் பல நாடுகளின் ஆட்சி சரிந்தது. ஆனால் அப்போது மலேசியாவின் பிரதமராக இருந்த நான், முக்கிய சில முடிவுகளை எடுத்தேன். அப்போதைய திறைமையான அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் எனக்கு உறுதுணையாக மலேசியாவைக் கோவிட்டிலிருந்து மீட்க வேண்டுமென திட்டங்களை வகுத்து செயல்படுத்தினர். உண்மையில் கோவிட் காலத்தின் போது எந்தவொரு முதலீடும் இல்லை, அரசாங்கத்தின் கடன் சுமையைப் பாதுகாத்து மீட்டெடுத்தது அனைத்தும் பெரிக்காத்தானின் நிர்வாகத் திறன் என்பதை Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



