RM 427 மில்லியன் ஊழலில் முகைதீன் நேரடியாகச் சம்மந்தப்பட்டுள்ளார்! முன்னாள் நிதி அமைச்சர் வாக்குமூலம்!
- THINAGAREN SANGGAREN
- 07 Jul, 2026
ஜூலை 7,
கோவிட் காலத்தில் செயல்பட வேண்டிய Jana Wibawa திட்டத்தில் அப்போதைய பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நேரடியாகத் தலையிட்டதாகவும் அவர் கொடுத்த பட்டியலில் இருக்கும் குத்தகையாளர்களுக்கு அரசு நிதி வழங்கப்பட வேண்டும் என தன்னைக் கட்டாயப்படுத்தியதாகவும் முன்னாள் நிதி அமைச்சரான Datuk Seri Tengku Zafrul உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். சுமார் RM 12 பில்லியன் மதிப்பில் 89 மேம்பாட்டுப் பணிகளை உள்ளடக்கிய Jana Wibawa திட்டத்தில் அப்போதைய பிரதமர் Tan Sri Muhyiddin Yassin ஊழல் செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் முன்னாள் நிதி அமைச்சரின் வாக்குமூலம் Tan Sri Muhyiddin Yassinக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Jana Wibawa மேம்பாட்டுத் திட்டத்தில் குறைவான செலவீனங்களைக் கொண்ட குத்தகையாளர்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்தாலும் முகைதீன் வழங்கிய 54 குத்தகையாளர்களுக்கு இந்த திட்டத்தின் நிதிகள் வழங்கப்பட்டதாக அப்போதைய நிதி அமைச்சரான Datuk Seri Tengku Zafrul தெரிவித்தார். குறிப்பாக KCJ Engineering Sdn Bhd எனும் நிறுவனம் பட்டியலில் 31 ஆவது இடத்தில் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நெகிரி செம்பிலானில் உள்ள FELDA Bukit Jalor-லிருந்து Gemas செல்லும் சாலையை மேம்படுத்துவதற்கான RM 100 மதிப்பிலானக் குத்தகை வழங்கப்பட்டதாக Datuk Seri Tengku Zafrul உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



