பெரிக்காத்தானின் ஒரே தலைவர் முகைதீன் மட்டுமே! பெரிக்காத்தான் இளைஞர் பிரிவு உறதி!
- Thinagaren Sanggaren
- 12 Jan, 2026
ஜனவரி 12,
பெரிக்காத்தானின் தலைமையை முகைதீனைத் தவிர வேறு யார் ஏற்றாலும் அது அடுத்த பொதுத்தேர்தலில் பெரிக்காத்தானுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என பெரிக்காத்தான் கூட்டணியின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை பெரிக்காத்தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய Tan Sri Muhyiddin Yassin-ஐ BERSATU இளைஞர் பிரிவுத் தலைவர் HILMAN IDHAM, GERAKAN இளைஞர் பிரிவுத் தலைவர் LEE BOON SHIAN, MIPP இளைஞர் பிரிவுத் தலைவர் JUSTIN PRABAKARAN ஆகிய மூவரும் Bukit Damansaraவில் உள்ள முகைதீனின் வீட்டில் சந்தித்தனர்
இச்சந்திப்பில் பெரிக்காத்தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய முகைதீனின் முடிவை மாற்றிக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டதாக MIPP இளைஞர் பிரிவுத் தலைவர் JUSTIN PRABAKARAN தெரிவித்தார். உண்மையில் பெரிக்காத்தானின் தலைவர் பொறுப்புக்கு வருபவர் கூட்டணிக் கட்சியின் ஆதரவுடனும் பெரிக்காத்தான் உச்சமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனும் நியமிக்கப்பட வேண்டும் என்கிற நிலையில் முகைதீன் யாசின் அறிவித்த ராஜினாமாவால் பெரிக்காத்தானின் தலைமை பாதித்துள்ளதாக MIPP இளைஞர் பிரிவுத் தலைவர் JUSTIN PRABAKARAN தெரிவித்தார்.
அனைத்து
சமூகமும் மதிக்கும் தலைவராக முகைதீன் திகழ்கிறார் என்பதால் அடுத்த பொதுத்தேர்தலில்
பெரிக்காத்தான் முகைதீனின் தலைமையில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றிப்பெற முடியும்
என இளைஞர் பிரிவினர் நம்புவதால் பெரிக்காத்தானை வழிநடத்த முகைதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக
BERSATU இளைஞர் பிரிவுத்
தலைவர் HILMAN IDHAM, GERAKAN இளைஞர் பிரிவுத் தலைவர் LEE
BOON SHIAN, MIPP இளைஞர் பிரிவுத் தலைவர் JUSTIN PRABAKARAN ஆகிய 3 கூட்டணிக் கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்களும் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



