முகைதீனை எதிர்த்த 2 மாநிலப் பெரிக்காத்தான் தலைவர்கள் நீக்கம்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 28,

பெரிக்காத்தான் நேசனலின் மாநிலத் தலைவர்களின் பட்டியல் நேற்று நடைபெற்ற பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டத்தில் முகைதீன் யாசி, கெராக்கான் தலைவர் டோமினிக் லாவ், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இம்ராகிம் அஸ்மின் அலி, புனிதன் ஆகிய பெரிக்காத்தான் தலைவர்கள் பங்கேற்று பெரிக்காத்தானின் மாநிலத் தலைவர்களை நியமித்தனர். முகைதீனின் தலைமைத்துவத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்த பெர்லிஸ் பெரிக்காத்தான் தலைவராக இருந்த Haji Mohd Shukri Ramli, பகாங் பெரிக்காத்தான் தலைவராக இருந்த Datuk Seri Saifuddin Abdullah ஆகிய இருவரும் மாநிலத் தலைவர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

பெர்லிஸ் மாநில மெந்திரி பெசாரான Haji Mohd Shukri Ramli பெர்லிஸ் மாநிலப் பெரிக்காத்தான் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு புதிய மாநிலத் தலைவராக Dato’ Seri Dr. Shahidan Kassim பொறுப்பேற்றுள்ளார். இந்திரா மாக்கோத்தான் நாடாளுமன்ற உறுப்பினரான Datuk Seri Saifuddin Abdullah பகாங் மாநிலப் பெரிக்காத்தான் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு புதிய மாநிலத் தலைவராகப் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Dato’ Sri Tuan Ibrahim Tuan Man நியமிக்கப்பட்டுள்ளார். ஜொகூர் பெரிக்காத்தான் தலைவராக Dato’ Dr. Sahruddin Jamal, கெடா பெரிக்காத்தான் தலைவராக Dato’ Seri Muhammad Sanusi Nor, கிளந்தான் பெரிக்காத்தான் தலைவராக Dato’ Haji Ahmad Yakob, மலாக்கா பெரிக்காத்தான் தலைவராக Datuk Mas Ermieyati Samsudin, நெகிரி செம்பிலான் பெரிக்காத்தான் தலைவராக  Mohamed Hanifah Abu Baker, பேராக் பெரிக்காத்தான் தலைவராக Dato’ Seri Ahmad Faizal Azumu, பினாங்கு பெரிக்காத்தான் தலைவராகக் கெராக்கான் கட்சியின் தலைவர் Datuk Dominic Lau, சபா பெரிக்காத்தான் தலைவராக Datuk Seri Dr. Ronald Kiandee, சரவாக் பெரிக்காத்தான் தலைவராக Jaziri Alkaf Abdullah Saffian, சீலாங்கூர் பெரிக்காத்தான் தலைவராக Dato’ Seri Azmin Ali, திரங்கானு பெரிக்காத்தான் தலைவராக Dato’ Seri Ahmad Samsuri Mokhtar, கூட்டரசு வளாகப் பெரிக்காத்தான் தலைவராக Datuk Mohd Radzi Jidin என அனைத்து மாநிலங்களுக்குமான பெரிக்காத்தான் மாநிலத் தலைவர்களைப் பெரிக்காத்தான் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *