“முஹ்யித்தினும் இனி பிரதமர் வேட்பாளர் அல்ல” – அகமட் சம்சுரி பதில்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 5-

பெரிக்காதான் நேஷனல் (PN) கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து எழுந்துள்ள விவாதத்தில், PN தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சம்சுரி மொக்தார் தனது பதிலை வெளிப்படுத்தியுள்ளார். பெர்சத்து கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ முஹ்யிதின் யாசின் இனி பிரதமர் வேட்பாளர் அல்ல என்று அவர் தெரிவித்தார்.

திரங்கானு மாநில முதல்வருமான அகமட் சம்சுரி, இந்த கருத்தை முஹ்யிதின் முன்பு வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலாக கூறினார். முன்னதாக முஹ்யிதின், “டாக்டர் சம்சுரி  PN தலைவர் தான், ஆனால் அவர் பிரதமர் வேட்பாளர் அல்ல” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பதிலளித்த சம்சுரி, இந்த விவகாரம் குறித்து பல ஊடக நிருபர்கள் தன்னிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியதால் தான் இந்த விளக்கத்தை வழங்க வேண்டியதாக இருந்தது என்றார். “முஹ்யிதின் வெளியிட்ட கருத்து குறித்து நிருபர்கள் பலர் என்னிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலாக நான் கூறியது, TSMY (தான் ஸ்ரீ முஹ்யிதின் யாசின்) கூட இனி பிரதமர் வேட்பாளர் அல்ல என்பதே,” என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *