நாடாளுமன்ற கூட்டத்திற்கு முஹ்யிதீன் வரவில்லை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 23-

பாகோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பெர்சத்து கட்சி  தலைவருமான தான் ஸ்ரீ மஹ்யிதீன் யாசின்  இன்று மக்களவை அமர்வில் காணப்படவில்லை. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, அவரது கட்சியின் துணைத் தலைவர் ஹம்சா சைனுடின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து சுமார் 10 நாட்களுக்கு பின்னர் இந்த நிலை உருவாகியுள்ளது.

ஹம்சா, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பதவி பாஸ் கட்சி சார்பிலான ஒருவரால் நிரப்பப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெரிக்காத்தான்  கூட்டணியின் தலைவராக இருந்த முஹ்யிதீன், தற்போது அந்தப் பொறுப்பை இழந்துள்ளார். நேற்று நடைபெற்ற உயர்மட்ட அவசரக் கூட்டத்தில், திரங்கானு முதலமைச்சர் அகமட் சம்சுரி புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *