6 வயதில் பள்ளி, 16 வயதில் நிறைவு: புதிய கல்வி பாதை

top-news

கோலாலம்பூர், ஜன. 21-

 2027 கல்வியாண்டில் ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பில் முன்கூட்டியே சேரும் குழந்தைகள், 16 வயதிலேயே மேல்நிலைப் பள்ளி கல்வியை நிறைவு செய்யும் புதிய கல்வி பாதையை கல்வி அமைச்சு(KPM) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், குழந்தைகளின் வளர்ச்சி,  கற்றல் திறனை முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முன்கூட்டிய சேர்க்கை பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையிலானது மட்டுமே என்றும், கட்டாயமல்ல என்றும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. ஐந்து வயதில் பாலர் பள்ளி கல்வியை முடித்திருப்பதும், நிர்ணயிக்கப்பட்ட கண்டறிதல் சோதனையில் (diagnostic screening) தேர்ச்சி பெறுவதும் அவசியமாகும். அதே நேரத்தில், குழந்தையின் மன, அறிவுத் தயார்நிலை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தம் ஏற்படாமல், அவர்களின் திறனைப் பொருத்தே கல்வி முன்னேற்றம் அமைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *