உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் மையத் தன்மை, சுயாட்சியை ஆசியான் தற்காக்க வேண்டும்!
- Muthu Kumar
- 06 Sep, 2025
கோலாலம்பூர், செப். 6-
வல்லரசுகளிடமிருந்து போட்டித்தன்மை, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில், மையத் தன்மையையும் சுயாட்சியையும் ஆசியான் தற்காக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
கலந்துரையாடலும் பரஸ்பர மரியாதையும் முக்கியமாக உள்ளன என்பதை அந்த அனுபவங்கள் காட்டுவதாக புரோஜெக்ட் சிண்டிகெட்டில் வெளியிடப்பட்ட கட்டுரையில் பிரதமர் தெரிவித்தார்.மேலும், இது, வட்டார அமைதியின் பாதுகாவலராக ஆசியானின் பங்களிப்பில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அவர் விவரித்தார்.
உலகின் பன்முகத்தன்மை கொண்ட வட்டாரத்தில் பதற்றங்களை களைந்து நெருக்கடிகளைத் தடுத்து செழிப்பை வளர்க்க ஒத்துழைப்பு கலாச்சாரமும் வெளிப்படையான தொடர்பும் ஆசியானுக்கு உதவுவதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார். உதாரணத்திற்கு, கம்போடியா மற்றும் தாய்லாந்து எல்லையில் நடந்த பதற்றம் தொடர்பாக அந்நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தி போர்நிறுத்தத்தை அடைவதில் ஆசியான் தலைவராக மலேசியா வெற்றி பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
66 கோடி மக்கள் தொகையுடன் உலகின் மிக முக்கிய சந்தைகளில் ஒன்றாக ஆசியான் விளங்குகிறது.இருப்பினும், வளர்ச்சி இடைவெளியைக் குறைத்து, ஆசியான் உறுப்பு நாடுகளிடையே மிகவும் சமமான உறவுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அன்வார் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



