பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவரின் தொகுதியை பாஸ் கைப்பற்ற வேண்டும்! - சிலாங்கூர் பாஸ் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 13:  அடுத்த மாநிலத் தேர்தலில், தற்போது பெர்சாத்து இளைஞர் தலைவர் ஹில்மான் இடாம் வைத்திருக்கும் கொம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதியில் பாஸ் (PAS) கட்சி போட்டியிட வேண்டும் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுக்ரி ஓமர் வலியுறுத்தியுள்ளார்.

சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு தேர்தல் பிரசாரத்திற்கு முழுமையாக தயாராக இருப்பதாகவும், உயர்ந்த நேர்மை மற்றும் நல்லொழுக்கம் கொண்ட பல தகுதியான வேட்பாளர்கள் பாஸ் கட்சியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நீங்கள் தயாரா?” என ஷா ஆலம் பாஸ் தலைவர் நேற்று தனது ஃபேஸ்புக் பதிவில் கேள்வி எழுப்பினார்.

இந்த அழைப்புக்கு கொம்பாக் பாஸ் இளைஞர் பிரிவும் ஆதரவு தெரிவித்துள்ளது. பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை அவமதிக்கும் அல்லது சவால் விடும் எந்தக் கட்சியையும் எதிர்கொள்ளtத் தயாராக இருப்பதாக அந்தப் பிரிவு தெரிவித்தது.

மேலும், 2023 மாநிலத் தேர்தலில் ஹில்மான் இடாம் வெற்றி பெற பாஸ் முக்கிய பங்கு வகித்தபோதும், அதன் பின்னர் அவர் அந்தப் பகுதியில் பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்படவோ, தொடர்பில் இருக்கவோ இல்லை என கொம்பாக் பாஸ் இளைஞர் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தச் சூழல், பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் பதவி விலகியதைத் தொடர்ந்து, பெரிகாத்தான் நேஷனல் (PN) தலைமை தொடர்பாக அவசர PN உச்சக் மன்றக் கூட்டம் நடத்த வேண்டும் என்று பாஸ் தலைவர் ஹாடி அவாங் கோரிக்கை வைத்தார்.ஹாடியின் இந்தக் கோரிக்கையை ஹில்மான் நிராகரித்துப் பேசியதன் விளைவாக  இதுபோன்ற அதிரடி முடிவுகளை பாஸ் எடுக்கத் தொடங்கியுள்ளது.

பாஸ் இப்போது ஒவ்வொரு பெரிக்காத்தான் உறுப்புக்  கட்சிக்கும் தங்களது உள் முடிவுகளை எடுக்க இடம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னரே உச்ச மன்றக் கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் ஹில்மான் தெரிவித்தார்.

ஹில்மானின் இந்த நிலைப்பாட்டுக்கு பாஸ் தரப்பில் கடும் எதிர்வினை ஏற்பட்டுள்ளது. பாஸ் இளைஞர் தலைவர் அஃப்னான் ஹமிமி தைப் அஸாமுடின், PN தொடர்பான பல அரசியல் முடிவுகளில் பாஸை ஆலோசிக்காமல் பெர்சாத்து தனிப்பட்ட முறையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *