புதிய சவால்களை ஆசியான் எதிர்கொள்ள வேண்டும் -பிரதமர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக.22-

பரஸ்பர சட்ட உதவியால் முதலீடு செய்வது மட்டுமின்றி சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்தவும், இலக்கவியல் நிர்வாகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு Alயை, ஒழுங்கமைப்பதற்கான புதிய சவால்களை ஆசியான் எதிர்கொள்ள வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

உள்நாட்டில் உருவாக்கப்படும் வலுவான அஸ்திவாரங்களே, வெளிநாடுகளில் உறுதியான கட்டமைப்பை நிலைநிறுத்துவதால், ஒவ்வொரு நாடும் அதன் சட்ட அடித்தளங்களை வலுப்படுத்த உறுதி கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"இவை சுருக்கமான சீர்திருத்தங்கள் அல்ல. அவை நம்பிக்கையை வளர்க்கும் செயல்கள். அதிவேகமாக மாறிவரும் உலகில் ஆசியான் பொருத்தமானதாகவும் மீள்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்வதற்கான செயல்கள். பேச்சுவார்த்தை மற்றும் கொள்கை ரீதியான அரசதந்திரத்தின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை நமது வட்டாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஆசியானின் அமைதிக்கான அணுகுமுறை வலிமை, ஒருமித்த மற்றும் அதுக்கு அறியது. உணர்வு நமது ஒத்துழைப்பையும் வழிநடத்த வேண்டும்'' என்றார் அவர்.

ஆசியானின் அமைதிக்கான அணுகுமுறை எப்போதும் வலிமை, ஒருமித்த கருத்து மற்றும் மரியாதை ஆகியவற்றைக் கொண்டதாக இருப்பதால், அதே உணர்வு வட்டாரத்தின் சட்ட ஒத்துழைப்பிற்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அதோடு, மோதல், நிச்சயமற்ற தன்மையை மட்டுமே உருவாக்குவதை வரலாறு காட்டும் நிலையில், உரையாடலே நீடித்த நிலைத்தன்மைக்குத் தேவையான நம்பிக்கையை உருவாக்குவதை அவர் சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *