போலி MYKAD வைத்திருந்த வெளிநாட்டு ஆடவர் கைது!

top-news

மார்ச் 8,

போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி வந்த வெளிநாட்டு ஆடவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  கோத்தா கினாபாலுவில் சந்தேகத்திற்குரிய ஆடவரைச் சோதனை செய்ததில் தாம் ஒரு மலேசியர் என தெரிவித்த ஆடவரின் அடையாள அட்டையைச் சோதனையிட்டதில் அது அவருடையது அல்ல என தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட வெளிநாட்டு ஆடவர் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் சோதனையிலிருந்து தப்பிக்க மற்றொருவருடைய அடையாள அட்டையைப் பயன்படுத்துவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக TAWAU மாவட்டக் காவல் ஆணையர் Jasmin bin Hussin தெரிவித்தார். 

வெளிநாட்டு ஆடவர் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறையும் RM 20,000 அபராதமும் விதிக்கபடும் என அவர் தெரிவித்தார். தற்போது சம்மந்தப்பட்ட வெளிநாட்டு ஆடவர் TAWAU காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் MYKAD-இன் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் TAWAU மாவட்டக் காவல் ஆணையர் Jasmin bin Hussin தெரிவித்தார். 

Seorang lelaki ditahan di Tawau kerana menggunakan MyKad milik orang lain untuk mengelak dikesan sebagai warga asing. Polis mengesahkan dokumen itu dilaporkan hilang di Kota Kinabalu. Suspek kini disiasat dan berdepan hukuman penjara atau denda

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *