நஜீப் விடுதலையாகட்டும்! நான் பதவி விலகுவேன்! டி.ஏ.பி அமைச்சர் அம்னோவுக்குப் பதில்!
- THINAGAREN SANGGAREN
- 12 Jul, 2026
ஜூலை 12,
ஜொகூரில் பாரிசான் பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகத் தாம் எங்கும் தெரிவிக்கவில்லை என வீடமைப்பூ உள்ளாட்சி அமைச்சர் Nga Kor Ming விளக்கமளித்தார். தேர்தலின் போது தனியார் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை அம்னோவினர் மீண்டும் பார்க்க வேண்டும் என Nga Kor Ming வலியுறுத்தினார். RM51.4 பில்லியன் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib விடுதலை செய்யப்பட்டால் தாம் பதவி விலகுவதாகத் தெரிவித்ததாக Nga Kor Ming குறிப்பிட்டார்.
நஜீப் விடுதலை செய்யப்பட்டால் அது நாட்டின் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும். ஒரு வழக்கறிஞராக நானே நஜீப்பிற்கு எதிராக வாதாடுவேன் என Nga Kor Ming தெரிவித்தார். இப்போது மலேசியர்கள் RM51.4 பில்லியன் கடனில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் நஜீப் என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் அப்படியான நஜீப் விடுதலை பெற்றால் நிச்சயம் அரசாங்கப் பொறுப்பிலிருந்து தாம் விலகுவேன் என டி.ஏ.பி கட்சியின் துணைத் தலைவருமான Nga Kor Ming தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



