நஜீப்பின் RM 2.3 பில்லியன் பணமோசடி வழக்கு நாளை நீதிமன்ற விசாரணை தொடங்கும்!
- Thinagaren Sanggaren
- 20 Oct, 2025
அக்தோபர் 20,
முன்னாள் பிரதமர் நஜீப் தொடர்புடை RM 2.3 பில்லியன் 1 MDB பணமோசடி வழக்கின் விசாரணை நாளை முதல் 9 நாள்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 50 அரசு தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் 1MDB தலைமை நிர்வாகிகளின் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் Muhammad Shafee Abdullah தெரிவித்தார்.
நஜீப்பிற்கு எதிரான அரசு தரப்பின் 50 சாட்சிகளை விசாரிக்க 293 நாள்கள் ஆகியதாகவும் தற்போது 1MDB தலைமைகளின் 9 நாள்கள் விசாரணை மேற்கொள்ளவிருப்பதால் இத்துடன் சாட்சிகளின் விசாரணைகள் முடிவுக்கு வரும் என தாம் நம்புவதாக Muhammad Shafee Abdullah தெரிவித்தார். நஜிப் மீது 1MDB நிதியிலிருந்து RM2.3 பில்லியன் மோசடி செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகளும், பணமோசடி செய்ததாக 21 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. மேலும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதால் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த சாட்சிகளின் விசாரணைகள் முழுமையாக நடத்தப்பட்ட பின்னரே மாமன்னர் நஜீப்பிற்கு வழங்கிய பொதுமன்னிப்பு அமலுக்கு வரும் என நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் Muhammad Shafee Abdullah தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



