நஜீப்பின் ஆதாரத்தில் உண்மையில்லை! எல்லாமே போலி! நீதிமன்றம் அதிரடி!
- Thinagaren Sanggaren
- 26 Dec, 2025
டிசம்பர் 26,
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak தொடர்புடைய 1MDB ஊழல் வழக்கை இன்று உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியதில் நஜீப் தரப்பிலிருந்து சமர்பிக்கப்பட்ட முக்கிய சாட்சிகளின் உண்மை தன்மை கேள்விக்குறியதாக இருப்பதாகவும் இது போலியான சாட்சியாகவும் போலியான ஆதாரமாகவும் வகைப்படுத்தும் வகையில் இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி Collin Lawrence Sequerah வலியுறுத்தினார். இன்று காலை 1MDB ஊழலில் தொடர்புடைய RM2.28 பில்லியன் நிதி முறைக்கேடு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் நஜீப்பின் ஆதரவாளர்கள் குவிந்தனர். நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக நஜீப் உயர்நீதிமன்றத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
இன்று காலை முதற்கட்ட நீதிமன்ற விசாரணையில் நஜீப்பிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய ஆதாரங்களில் ஒன்றான Saudi அரேபியாவின் முன்னாள் மன்னர் King Abdullah 2011 பிப்ரவரி 1, 2014 ஜூன் 1 ஆகிய திகதிகளில் வழங்கிய 100 மில்லியன் டாலர், 375 மில்லியன் டாலர், 800 மில்லியன் டாலர் ஆகிய மொத்த நிதியும் நன்கொடையாக வழங்கப்பட்டது எனுபடியான சாட்சிக் கடிதங்கள் உண்மையானதா எனும் சந்தேகத்தையும் நீதிபதி எழுப்பினார். ஏனெனில் Saudi அரேபியாவின் முன்னாள் மன்னர் King Abdullah இப்போது உயிருடன் இல்லை என்பதால் இந்த கடிதங்கள் குறித்தான உண்மை தன்மை கேள்விக்குரியது என உயர்நீதிமன்ற நீதிபதி Collin Lawrence Sequerah தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



