இஸ்லாத்தை நீதித்துறை கட்டுப்படுத்துகிறதா? பாஸ் கட்சி அதிருப்தி!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 23,

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் வழங்கிய பொதுமன்னிப்பை நீதிமன்றம் ஏற்க மறுத்திருப்பது இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளது என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்துள்ளார். நாங்கள் நீதித்துறையை மதிக்கிறோம். அதே நேரத்தில் இஸ்லாமிய மலாய் ஆட்சியாளர்கள் எடுத்த ஒரு முடிவை நீதிமன்றம் ஏற்க மறுப்பதையும் இஸ்லாமியர்களாக நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது என வழக்கறிஞருமான Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்.

பொதுமன்னிப்பும் தண்டனை குறைப்பும் மாமன்னர் வழங்கியது எனும் போது, நீதித்துறையின் பரிசீலனையே தேவையற்றது என Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். மலேசியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பின்படி பொதுமன்னிப்பு வழங்குவதும் தண்டனையை இடைநிறுத்துவதும், நீதிமன்றத்தின் தண்டனையைக் குறைப்பதும் இஸ்லாமிய மலாய் ஆட்சியாளர்களின் விருப்பம் என்பதை Datuk Seri Takiyuddin Hassan சுட்டிக்காட்டினார். இது அரசு பொதுமன்னிப்பு வாரியத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தபட வேண்டும் என Datuk Seri Takiyuddin Hassan மேற்கோள் காட்டினார். ஆனால் நஜீப் விவகாரத்தில் நீதித்துறை இஸ்லாமிய மலாய் ஆட்சியாளர்களின் ஒருமித்த கருத்தை மறுத்திருப்பது நீதித்துறைக்கும் சட்டத்திற்கும் மாமன்னரின் அதிகாரத்திற்கும் முரணானது என Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *