உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து நஜீப் இன்று மேல்முறையீடு செய்தார்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 29,

முன்னார் பிரதமர் நஜீப்பின் வீட்டுக்காவல் தொடர்பான மாமன்னரின் தண்டனை குறைப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றத்திற்கு எதிராக  நஜீப் மேல்முறையீடு செய்துள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1MDB-யின் 2.3 பில்லியன் நிதி மோசடி, SRC International-இன் RM42 மில்லியன் பணமோசடி என அடுக்கடுக்கான ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப்பிற்குக் கடந்த 2022 ஆகஸ்ட் 23, உயர்நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

அதனை அடுத்து 2022 செப்டம்பர் 2 அப்போதைய  மாமன்னர் நஜீப்பிற்கு அரசு மன்னிப்பு வழங்கி நஜீப்பின் தண்டனையைக் குறைப்பதாக மன்னிப்பு வாரியத்தின் மூலமாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நஜீப்பின் 12 ஆண்டுகள் சிறை தண்டனையை 6 ஆண்டுகளாகவும் 210 மில்லியன் அபராதத்தை 50 மில்லியனாகவும் குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து நஜீப்பிற்கு மீதமுள்ள சிறை தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க நஜீப்பின் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்த நிலையில் கடந்த 2025 டிசம்பர் 26 மாமன்னரின் தண்டனை குறைப்பை உயர்நீதிமன்றம் முழுமையாகச் செயல்படுத்தினாலும் வீட்டுக்காவலை அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணைகளும் நீதிமன்றத் தீர்ப்பும் முன்னமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னரின் பொதுமன்னிப்பை ஏற்றுக் கொண்டும் நஜீப்பிற்கு வீட்டுக் காவலில் அனுமதிக்க வேண்டும் என இன்று டிசம்பர் 29 மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *