SRC International ஊழலுக்கு நஜீப் பொறுப்பேற்க வேண்டும்! நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

top-news

ஜூலை 7,


முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak SRC International ஊழலுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் Datuk Lim Chee Wee வாதிட்டார். SRC International நிறுவனத்தில் RM5.55 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் மோசடி நடந்திருக்கிறது. SRC International நிறுவனம் என்பது மக்கள் வரி பணத்தால் நிறுவப்பட்ட அனைத்துலக நிறுவனம் என்பதை வழக்கறிஞர் Datuk Lim Chee Wee நினைவூட்டினார். இந்த நிறுவனம் தொடங்கியது முதல் இழப்பை மட்டுமே எதிர்நோக்கிய நிலையில் இழப்பைச் சந்திக்கும் நிறுவனத்திலிருந்து முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 120 மில்லியன் அமேரிக்க டாலர் எப்படி வழங்கப்பட்டது என்பதையும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் Datuk Lim Chee Wee வலியுறுத்தினார்.

மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மக்களின் வரி பணத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து சொந்த தேவைகளை முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak பூர்த்தி செய்துள்ளார். ஆனால் இழப்பை எதிர்நோக்கிய ஒரு நிறுவனத்தில் எப்படி RM 550 மில்லியன் ரிங்கிட்டுக்கானப் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்க முடியும்? என உயர்நீதிமன்றத்தில் நஜீப்பிற்கு எதிராக வழக்கறிஞர் Datuk Lim Chee Wee கேள்விகளை முன் வைத்துள்ளார்.


Bekas Perdana Menteri Datuk Seri Najib Razak perlu bertanggungjawab terhadap skandal SRC International bernilai RM5.55 bilion hujah peguam Datuk Lim Chee Wee di Mahkamah Tinggi. Beliau menegaskan dana awam tidak wajar digunakan untuk kepentingan peribadi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *