எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்! – நஜீப்பை விமர்சித்த டி.ஏ.பிக்குப் பாரிசான் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 22,

நஜீப்பின் சிறை டி.ஏ.பிக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்திருக்கும் டி.ஏ.பியின் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான Yeo Bee Yin கருத்து எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல உள்ளது என பாரிசான் தலைவரும் துணைப் பிரதமருமான ZAHID HAMIDI தெரிவித்தார். டி.ஏ.பியின் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான Yeo Bee Yinக்குக் குறைந்தபட்ச மனிதாபிமானம் இருந்தால் இப்படியானக் கருத்தை வெளியிடமாட்டார் என அம்னோ பொதுச்செயலாளர் Datuk Dr. Asyraf Wajdi Dusuki தெரிவித்துள்ளார். டி.ஏ.பியின் இப்படியான கருத்து இழிவான அரசியலுக்கு ஓர் உதாரணம் என பாரிசான் பொதுச் செயலாளரும் அமைச்சருமான Datuk Seri Dr. Zambry Abdul Kadir தெரிவித்துள்ளார்.

கொண்டாடும் அளவிற்கு டி.ஏ.பிக்கு இதில் என்ன ஆனந்தம் என Datuk Seri Dr. Zambry Abdul Kadir கேள்வி எழுப்பினார். மற்றவர்களின் துன்பத்தைக் கொண்டாடும் மனப்பான்மை மனித இயல்பு இல்லை. வாழ்க்கை ஒரு சுழற்சி. உங்கள் தலைவர்களும் நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கி வருகிறார்கள். அவர்களும் இது நேர்ந்தால் அப்போதும் டி.ஏ.பி கொண்டாடுமா என Datuk Seri Dr. Zambry Abdul Kadir கேள்வி எழுப்பினார். 

டி.ஏ.பியின் இப்படியான அறிக்கை முரட்டுத்தனமானது மட்டுமின்றி இது அரசியல் பக்குவற்ற கருத்து என்றும் அம்னோ பொதுச்செயலாளர் Datuk Dr. Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். அம்னோவின் போராட்டத்தையும் உழைப்பையும் அறியாத ஒரு குருடர்கள் கூட்டம் இன்னும் இருக்கிறது. அதுவும் கூடவே இருக்கிறது எனும்போது வருத்தமாகவும் இருக்கிறது என அம்னோ பொதுச்செயலாளர் Datuk Dr. Asyraf Wajdi Dusuki சாடினார். 

டி.ஏ.பி இப்படி பேசுவது ஆச்சரியமாக இல்லை. டி.ஏ.பியிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Mohd Razlan Rafii தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளைக் கடந்து நஜீப்பிற்கு மலாய்க்காரர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. இந்த கொடுங்கோன்மக்கு எதிராக மலாய்க்காரர்கள் ஒன்றிணைந்தால் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள் என Datuk Mohd Razlan Rafii எச்சரிக்கை விடுத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *