நஜிப்பின் வீட்டுக் காவல் கோரிக்கை நிராகரிப்பு: காஜாங் சிறையில் தொடரும் தண்டனை

top-news

கோலாலம்பூர், டிச. 22-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், SRC இன்டர்னேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ஊழல் வழக்கில் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் நிறைவேற்ற அனுமதிக்கும் ‘திதா அடெண்டம்’ ஆணையை அமல்படுத்தக் கோரிய சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

நீதிபதி அலிஸ் லோக் யீ சிங் தீர்ப்பளிக்கையில், கடந்த ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நடந்த லெம்பாகா பெங்கம்புனான் (மன்னிப்பு வாரியம்) கூட்டத்தில் வீட்டுக் காவல் தொடர்பான எந்த விவாதமும் நடக்கவில்லை என்று திருப்தியடைந்தார். எனவே, அந்த அடெண்டம் ஆணை செல்லாது, வீட்டுக் காவலுக்கு அமல்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்தார்.

இதனால், நஜிப் தனது ஆறு ஆண்டு சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை காஜாங் சிறையிலேயே நிறைவேற்ற வேண்டியிருக்கும். 2022 முதல் சிறையில் உள்ள நாஜிப், கடந்த ஆண்டு மன்னிப்பு வாரியத்தால் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது. ஆனால் அடெண்டம் ஆணை மூலம் வீட்டுக் காவல் வழங்கப்பட்டதாக அவரது தரப்பு வாதிட்டது.

இந்த தீர்ப்பு நாஜிப்பின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *