RM 1 பில்லியன் வரி செலுத்தாத நஜீப்! திவால் நிலையில் மகன்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 5,

முன்னாள் பிரதமர் நஜீப் உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு RM 1.6 பில்லியன் வரி செலுத்தாததால் அவருடைய சொத்துகளை அரசு முடக்க வேண்டும் என LHDN வழக்கு பதிவு செய்துள்ளது. நஜீப்பின் மகன் Datuk Mohd Nazifuddin RM37.6 மில்லியன் வரியைச் செலுத்தாமல் இருப்பதாகவும் LHDN தெரிவித்துள்ளது. நஜீப்பிற்கும் அவரின் மகனுக்கும் எதிரான வழக்கை ஏற்றுக் கொண்டு செப்டம்பர் 4 வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுமென மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

கடந்த 2023 அக்டோபர் 16, நஜீப் மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவரும் நிலுவையில் இருக்கும் வரிகளைச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 17. நஜீப்பிற்கு எதிரான திவால் அறிவிப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன் வரி செலுத்த சிறப்பு விலக்கும் அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் LHDN எனும் தேசிய உள்நாட்டு வருவாய் வாரியத்திற்குச் சுமார் RM 2 பில்லியன் வரையில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *