நஜீப்பின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து சிறைக்கு அனுப்பிய நீதிமன்றம்!
- Thinagaren Sanggaren
- 14 Sep, 2025
செப்டம்பர் 14,
சொத்துக்குவிப்பு ஊழல் பணமோசடி என பல்வேறு குற்றங்களுக்காகச் சிறை தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak செய்திருந்த மேல்முறையீட்டை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார். அரசு பொது மன்னிப்பைப் பெற்றும் சிறையில் வைத்திருக்க வேண்டியதற்கு நீதிமன்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி நஜீப்பின் வழக்கறிஞர் தொடுத்திருந்த மேல்முறையீடு வழக்கிற்கு இடையூறாக இருப்பதால் தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
நஜீப்பின் பொது மன்னிப்பு நடைமுறைக்கு வர
வேண்டும் என்றால் முந்தைய வழக்குகளின் விசாரணைகள் முடிக்கப்பட வேண்டும். வழக்குகளின்
விசாரணைகள் பல கட்டமாக நடத்தப்பட்டு வருவதால் விசாரணைக்கான அவகாசத்தைக் குறைக்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதி நஜீப்பின் வழக்கறிஞருக்கு வலியுறுத்தினார். நஜீப்பின்
வீட்டுக்காவல் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணைக்குப் பின்னர் நடைமுறைக்கு வரும்
என்பதால் மீண்டும் நஜீப்பின் சிறை தண்டனை தொடரும் என்றும் விசாரணைக்குப் பின்னர் மீண்டும் நஜீப்பின்
வாக்குமூலத்தைப் பதிவு செய்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி Loke Yee
Ching உத்தரவிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



