நஜீப்பின் பொது மன்னிப்பை ரத்து செய்க! பார் கவுன்சில் வழக்கு!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 9,

முன்னாள் பிரதமர் DATUK SERI NAJIB RAZAK-க்கு மன்னிப்பு வாரியம் வாங்கிய பொது மன்னிப்பை எதிர்த்து தேசிய வழக்கறிஞர் மன்றம் தொடுத்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. நஜீப்பின் பொது மன்னிப்பிற்கு எதிரான மனுவிற்கு அரசு தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காததால் எதிர்வரும் ஜூலை 31 முதல் விசாரணை கூட்டம் நடத்தப்படும் என்றும் இந்த விசாரணைக்கு அரசு தரப்பும் புகார்தாரரும் மட்டும் பங்கேற்றால் போதும் DATUK SERI NAJIB RAZAK ஆஜராக வேண்டிய கட்டாயம் இல்லை என மேல் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 முன்னதாக நஜீப் இந்த வழக்கின் விசாரணையில் கலந்துகொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். தனக்கு எதிராகச் செயல்படும் நபர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாகவும் அவர்கள் தூண்டுதலால் இவ்வாறு வழக்கு தொடுத்திருப்பதாக நஜீப் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் முதல் விசாரணையில் நஜீப் பங்கேற்க வேண்டாம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் நஜீப்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. ஆனால் தற்போது இந்த விசாரணையில் நஜீப் பங்கேற்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என சிறப்பு மனுவை நஜீப்பின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *