அடுத்த பொதுத்தேர்தலில் நஜீப்பைச் சுற்றியே அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யும்!
- Thinagaren Sanggaren
- 02 Nov, 2025
நவம்பர் 2,
மலேசிய அரசியலில் முன்னாள் பிரதமர் நஜீப்பின் பெயரைப் பயன்படுத்தினால் அவர்களின் அரசியலுக்குப் பலம் சேர்க்கும் என்பதால் பெர்சத்து தற்போது நஜீப்பிற்கு ஆதரவானக் கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் ஆனால் நஜீப்பின் பெயரைப் பயன்படுத்த அருகதையற்றவர்கள் இந்த பெர்சத்துவினர் என்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநிலச் சட்டமன்றச் சபாநாயகருமான Datuk Puad Zarkashi தெரிவித்தார். அண்மையில் பெர்சத்துவின் Datuk Seri Hamzah Zainudin, Tan Sri Muhyiddin Yassin மட்டுமல்லாது பெர்சத்துவின் சில்லறைகளும் நஜீப்பிந் பெயரைப் பயன்படுத்தி நஜீப்பிற்குக் கலங்கம் ஏற்படுத்துவதாக Datuk Puad Zarkashi தெரிவித்தார்.
நஜீப் அனைத்து அரசியல் தலைவர்களையும் அரவணைத்தார். ஆனால் நஜீப்பின் தற்போதைய பரிதாபிமான நிலைக்குக் காரணமானவர்களை விடவும் நஜீப்பின் பரிதாபத்தை அரசியலாக்கும் எந்தவொரு தரப்பினரையும் அம்னோ ஏற்காது என Datuk Puad Zarkashi தெரிவித்தார். தற்போது நிலவும் அனைத்து அரசியல் நாடகங்களை நஜீப் அறிவார். நஜீப் நீதிமன்றம் வந்து போகும் ஒவ்வொரு முறையும் அவர் பாரிசானின் அரசியல் குறித்து விளக்கங்களைப் பெற்று வருகிறார்.
பெர்சத்து தற்போது நஜீப்பிற்காகப் பரிதாபம் காட்டுவது போலியானது. என்னுடைய வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள், அடுத்த பொதுத்தேர்தலில் நஜீப்பின் பெயரைக் குறிப்பிட்டு, அவரின் சாதனையைக் குறிப்பிட்டு எல்லா கட்சிகளுமே பிரச்சாரம் செய்யும் என Datuk Puad Zarkashi சவால் விடுத்தார். நஜீப்பை வீழ்த்தியவர்களை விடவும் நஜீப்புடன் இருந்து அவரைக் காட்டிக்கொடுத்தவர்களையும் அவருக்குத் துரோகம் செய்தவர்களையும் அம்னோவும் மக்களும் மன்னிக்கமாட்டார்கள். பெர்சத்துவினர் நஜீப்பின் பெயரைக் குறிப்பிடுவதற்குக் கூட அருகதையற்றவர்கள் என Datuk Puad Zarkashi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



