அல்லாஹ்வின் கருணையால் நஜீப் விடுதலை! - Rosmah Mansor உருக்கம்!

- Sangeetha K Loganathan
- 21 Jun, 2025
ஜூன் 21,
முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak மீதான RM27 மில்லியன் SRC International நிதி பணமோசடியிலிருந்து உயர்நீதிமன்றம் விலக்கு அளித்திருப்பது எங்கள் வீட்டில் ஒரு நிம்மதியை அளித்திருப்பதாகவும் நஜீப்பின் மனைவி Datin Seri Rosmah Mansor உருக்கமான ஓர் அறிக்கியில் தெரிவித்தார். நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் வழங்கிய விலக்கு என்பது கடவுளின் கருணையால் வழங்கப்பட்டிருப்பதாகவும் அல்லாஹ்வின் ஆசிர்வாதம் பெற்றதற்குச் சமம் என Datin Seri Rosmah Mansor தெரிவித்துள்ளார்.
நஜீப் இந்த நாட்டுக்குச் செய்த பல்வேறு நலத்திட்டங்களை நினைவுக்கூர்ந்து அவருக்காக எந்தவோர் எதிர்பார்ப்பும் இல்லாமல் அவருக்கு ஆதரவாகக் கூடிய பலருக்கும் தமது வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பதாக Datin Seri Rosmah Mansor தெரிவித்தார். நஜீப் எனும் தனிமனிதருக்காக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஒன்றாக அவருக்கு வழங்கியிருக்கும் ஆதரவு நிலைத்திருக்க நிச்சயம் தனது குடும்பமே நன்றிக் கடன்பட்டிருப்பதாக Datin Seri Rosmah Mansor தெரிவித்தார்.
Rosmah Mansor menyifatkan pembebasan Najib daripada kes SRC sebagai rahmat Allah yang membawa ketenangan kepada keluarga mereka. Beliau berterima kasih kepada rakyat yang terus menyokong Najib tanpa sebarang kepentingan dan menzahirkan penghargaan seumur hidup.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *