நஜீப் மற்றவர்களைக் குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும்! – நீதிமன்றத்தில் வாதம்!
- Thinagaren Sanggaren
- 26 Sep, 2025
செப்டம்பர் 26,
SRC International நிறுவனத்தின் RM3.95 பில்லியன் நிதியை முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak தவறாகக் கையாண்டதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வழக்கிலிருந்து தப்பிக்க மற்றவர்கள் மீது பழி போடுவதை நஜீப் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் SRC International நிறுவனத்தின் வழக்கறிஞர் Datuk Lim Chee Wee நீதிமன்றத்தை வலியுறுத்தினார். 2011 ஆம் ஆண்டும் SRC International நிறுவனத்தின் RM3.95 பில்லியன் நிதியைப் பயன்படுத்து வழிமுறைகள் குறித்து நஜீப்பிற்கு வழங்கப்பட்ட அறிவுரைகளை நஜீப் மீறியுள்ளதாகவும் அந்த நிதி அப்போதைய பிரதமராக இருந்த நஜீப்பின் நேரடி பார்வையில் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் மேலாளர்களின் தலையீடு இல்லாமல், அவர்களின் ஒப்புதல் இல்லாமல் நஜீப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதால் RM3.95 பில்லியன் தொடர்பான எந்தவொரு சர்ச்சைக்கும் SRC International நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என SRC International நிறுவனத்தின் வழக்கறிஞர் Datuk Lim Chee Wee வாதிட்டார்.
SRC International நிறுவனத்தின் இயக்குநர்கள் மாற்றப்பட்டு புதிய நிர்வாக இயக்குநராக Nik Faisal Ariff Kamil நியமிக்கப்பட்டதும் முதலீடுகள் எதுவுமில்ல என தெரிந்தும் தொடர்ந்து போலியான கணக்கறிக்கைகளை மட்டுமே வழங்கியதாகவும் Datuk Lim Chee Wee நஜீப்பின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். முதலீடுகள் இல்லாததால் அரசுத் துறையில் அதிக லாபம் ஈட்டிய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த நிதி மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க முன்னாள் பிரதமர் நஜீப், அப்போதைய SRC International நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் Nik Faisal Ariff Kamil ஆகிய இருவரின் தனிப்பட்ட விருப்பத்தில் மேற்கொள்ளப்பட்டதையும் Datuk Lim Chee Wee நீதிமன்றத்தில் வாதிட்டார். SRC International நிறுவனத்தின் மூலமாகத் தனிநபர்கள் பயன் பெற்றார்களா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றாலும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது SRC International நிறுவனம் இல்லை என Datuk Lim Chee Wee நீதிமன்ற விசாரணையில் வாதிட்டார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



