நஜீப் ஒரு குற்றவாளி! நஜீப் தப்பிக்க கூடாது! – அரசு வழக்கறிஞர்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 31,

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak தொடர்புடைய ஊழல் வழக்கிலிருந்து அவர் தப்பிப்பதற்காகப் புதிய கதைகளைக் கட்டவிழ்த்து விடுவதாகவும் மற்றவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி நஜீப் தப்பிக்க முயற்சிப்பதாகவும் அரசு வழக்கறிஞர் Datuk Ahmad Akram Gharib இன்று உயர்நீதிமன்றத்தில் வாதித்தார். 1MDB நிதியின் ஊழலில் நஜீப் சம்மந்தப்படவில்லை என யாருமே சொல்ல முடியாது. 1MDBயின் தலைமையே நஜீப் தான். நஜீப்பிற்குத் தெரியாமல் 1MDBயில் எந்தவொரு பணப் பரிவர்த்தனைகளும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை எனும் போது எந்ந அடிப்படையில் நஜீப் 1MDB ஊழலில் சம்மந்தப்படவில்லை என நஜீப்பின் வழக்கறிஞர் வாதிடுகிறார் என அரசு வழக்கறிஞர் Datuk Ahmad Akram Gharib உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

நஜீப் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டுமே தவிர அவர் மற்றவர்களைக் கைக்காட்ட கூடாது. தன் மீதான ஊழல் வழக்கிலிருந்தும் பணமோசடி வழக்கிலிருந்தும் நஜீப் தப்பிப்பதற்காக மற்றவர்களையும் இந்த விசாரணையில் இழுத்துவிடுகிறார். இதனால் விசாரணை மேலும் விரிவடைகிறது. ஆனால் விசாரணையை அரசு தரப்பு வேண்டுமென்றே தாமதிப்பதாக நஜீப் குற்றம்சாட்டுகிறார். நஜீப் மீது அரசாங்கம் கடந்த 2021லேயே விசாரணையை முடித்து விட்டது. ஆனால் இப்போது வரையிலும் நஜீப் கைக்காட்டிய நபர்களிடம் அரசு தரப்பு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் 1MDB நிதியின் ஊழலில் தனக்கு சம்மந்தம் இல்லை, அதற்கு இவர்கள் தான் காரணம் என நஜீப் கைக்காட்டியவர்களின் எண்ணிக்கை 47. நஜீப்பின் வாக்குமூலத்தில் நஜீப் குறிப்பிட்ட அந்த 47 நபர்களையும் அரசு தரப்பு விசாரிக்கிறது. இதில் அரசு தரப்பு எந்தவொரு நேர விரயமான காரியத்திலும் ஈடுபடவில்லை என அரசு வழக்கறிஞர் Datuk Ahmad Akram Gharib உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *