நஜீப் வழக்கில் பி.கே.ஆர் தலையிட வேண்டாம்! அம்னோ எச்சரிக்கை!
- Thinagaren Sanggaren
- 28 Dec, 2025
டிசம்பர் 28,
முன்னாள் பிரதமர் Datuk Seri நஜீப் தொடர்புடைய நீதிமன்ற வழக்கில் பி.கே.ஆர் கட்சியினர் தலையிடவோ கருத்து தெரிவிக்கவோ அவசியமில்லை என அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநிலச் சபாநாயகருமான Datuk Dr. Puad Zakarshi எச்சரிக்கை விடுத்துள்ளார். நஜீப்பைக் குறை கூற எந்தவொரு அருகதையும் பி.கே.ஆருக்கு இல்லை. அம்னோவைக் கேலி செய்யும் டி.ஏ.பிக்கும் தகுந்த பாடத்தை அம்னோ கற்பிக்கும் என Datuk Dr. Puad Zakarshi தெரிவித்துள்ளார்.
பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli நஜீப்பிற்கு எதிரானக் கருத்துகளைப் பரப்பி வருவதை அந்த கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும் என Datuk Dr. Puad Zakarshi கேட்டுக்கொண்டார். Datuk Seri Rafizi Ramli தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியவர். அவரால் திறமையான அமைச்சராக இருக்க முடியவில்லை. ஆனால் நஜீப் அப்படி அல்ல. தன் மீதான எல்லா பழிகளை எதிர்கொண்டு நாட்டையும் சிறப்பாக வழிநடத்தியவர். நஜீப்பைப் பற்றி பேச ரபீசி ரம்லிக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் தேவையற்ற அரசியல் குழப்பத்தை உண்டாக்காமல் பி.கே.ஆர் நஜீப் விவகாரத்தில் விலகி இருக்க வேண்டும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநிலச் சபாநாயகருமான Datuk Dr. Puad Zakarshi வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



