நஜீப்பிற்குப் பொதுமன்னிப்பு வேண்டும்! ZAHID HAMIDI வேண்டுகோள்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 21,

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak 3 ஆண்டுகள் சிறையில் இருப்பதால் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையைப் பாரிசான் தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi முன்வைத்துள்ளார். நான் நஜீப்பின் நண்பர் என்பதில் எனக்கு எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. பாரிசானின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான நஜீப்பின் விசுவாசியாகவே என்னைப் பலருக்கும் அறிமுகப்படுத்த தாம் விரும்புவதாக Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 

நஜீப் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார். ஆகையால் இப்போது நஜீப்பிற்கு முழு அரசு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னருக்குத் தாம் வேண்டுகோள் விடுப்பதாக Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். சட்ட நடைமுறையைக் கடந்து, தண்டனையை அனுபவிக்கும் ஒருவருக்கு அனுதாபம் காட்டும் ஒரு நீதியுள்ள ஆட்சியாளர் என்கிற முறையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் நஜீப்பின் அரசு பொதுமன்னிப்பை ஏற்பார் என நாங்கள் நம்புகிறோம் என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 

SRC International Sdn Bhd எனும் தனியார் நிறுவனத்தின் RM 42 மில்லியன் நிதியைக் கையாடல் செய்த வழக்கில் நஜீப்பிற்குக் கடந்த 2022 ஆகஸ்ட் 23 சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 2022 செப்டம்பர் 2 அப்போதைய மாமன்னருக்கு அரசு பொதுமன்னிப்பு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில். 2024 பிப்ரவரி 12 நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்க அரச மன்னிப்பு வாரியம் ஒப்புதல் அளித்து 12 ஆண்டுகள் சிறை தண்டனை, 6 ஆண்டுகளாகவும் RM 210 மில்லியன் அபராதம் RM50 மில்லியனாகவும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *