ஒற்றுமை வளர்க்கும் ஓணம் திருநாள்!
- Muthu Kumar
- 06 Sep, 2025
கோலாலம்பூர், செப். 6-
மலையாளத்தில் சிங்க மாதம் என்றழைக்கப்படும் ஆவணி மாதத்தின் பத்தாம் நாளில் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில் உலகெங்கும் வாழ்கின்ற மலையாள வம்சாவளியினர் திருவோணம் பண்டிகையை களிப்புற கொண்டாடி மகிழ்வர்.
வாழ்வில் ஒன்றி, மனதில் நீங்கா இடம்பிடித்து. தங்களைத் தேடிவரும் மாமன்னன் மகாபலியை கேரள மக்கள் உளமார வரவேற்கும் நம்பிக்கையே ஓணம் திருநாளின் தலையாய சிறப்பு எனலாம்.
அத்தகைய நம்பிக்கையில் திளைத்து, மலையாள சமூகத்தினரின் கலை,கலாச்சார நிகழ்ச்சி, பாரம்பரிய உணவுப் பதார்த்த அம்சங்களுடன், வரலாற்று நாடகமும் அரங்கேறியதில் பிரிக்பீல்ட்ஸ் ருக்குன் தெத்தாங்கா மண்டபம் நேற்று ஓணம் பண்டிகையில் களைகட்டியிருந்தது.
குடும்பத்தோடு கூடி கொண்டாடுவது கேரளாவில் வழக்கம் என்றாலும் வீட்டைக் காட்டிலும் சமூகமாக இணைந்து ஓரிடத்தில் கொண்டாடி மகிழவே வெளிநாடுகளில் வசிக்கும் மலையாளிகள் விரும்புவர். அந்த வகையில், குருபத் ஈவன்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ரவிஷங்கர் எழுத்தச்சன் மற்றும் அவரின் துணைவியார் வினோஷினி ஷங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற திருவோணம் சங்கமம் விழாவில் திரளான மலையாள சமூ கத்தினர் கலந்து கொண்டனர்.
காலை மணி பத்துக்கு குத்துவிளக்கேற்றி தொடங்கப்பட்ட விழாவில் ஓணம் பண்டிகையின் அடையாளமாகத் திகழும் மகாபலியின் வரலாறு, நாடகமாக அரங்கேறியது பெர்னாமா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



