பாரம்பரிய உணவுகள், கலாச்சார அம்சங்களுக்கு மாநில பாரம்பரிய அந்தஸ்து – பினாங்கு அரசு அறிவிப்பு
- Tamil Malar (Reporter)
- 29 Jan, 2026
ஜார்ஜ்டவுன், ஜன. 29-
பினாங்கு மாநில அரசு, 10 பாரம்பரிய உணவுகள், ஆறு கலாச்சார பாரம்பரிய அம்சங்களை மாநில பாரம்பரிய பட்டியலில் அறிவிப்பதற்கான அரசிதழ் (வார்த்தா) பிரகடனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
மாநில முதல்வர் சௌ கான் யூ கூறுகையில், இந்த ஒப்புதல் 2025 டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற மாநில நிர்வாக சபை (MMK) கூட்டத்தில் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அனைத்து பரிந்துரைகளும், கலாச்சார பாரம்பரிய நிபுணர் குழு (சமூக-கலாச்சாரம்) மூலம் விரிவான ஆய்வு, மதிப்பீட்டுக்குப் பின், மாநில பாரம்பரிய சபையின் பரிந்துரையுடன் அங்கீகரிக்கப்பட்டன என்றார்.
பினாங்கு மாநிலம், நீண்ட காலமாக பல இன மக்கள் இணைந்து வாழ்வதன் மூலம் உருவான வரலாற்று வளமும், கலாச்சாரப் பல்வகைமையும் கொண்ட மாநிலமாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார். உணவு, பண்டிகைகள், மரபுகள்,சமூக-கலாச்சார நடைமுறைகள் போன்றவை, பினாங்கின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய முக்கிய அம்சங்களாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த அனைத்து பாரம்பரிய அம்சங்களும் பினாங்கு மாநிலத்தின் மதிப்புமிக்க கலாச்சாரச் செல்வமாக விளங்குவதால், அவற்றை பாதுகாத்து, வருங்கால தலைமுறைகளுக்கு கொண்டு செல்லுவது மிகவும் அவசியம் என சௌ கான் யூ வலியுறுத்தினார். கோம்டார் கட்டிடத்தில் நடைபெற்ற அறிவிப்பு நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



