ஏ.ஐ வழி சுகாதார சேவையில் புதுமையை ஏற்படுத்த முயற்சி!
- Muthu Kumar
- 23 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 23-
செயற்கை நுண்ணறிவு, ஏஐ தொழில்நுட்பத்தை முக்கிய தளமாகக் கொண்டு, பெரிய அளவிலான இலக்கவியல் உருமாற்றம் மூலம் நாட்டின் சுகாதார சேவை அமைப்பில் புதுமையை ஏற்படுத்தும் முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டு வருகிறது.
நோயறிதலின் துல்லியத்தையும், நோயாளி தரவு நிர்வாகத்தை மேம்படுத்தும் திறன் கொண்ட, மின்னியில் மருத்துவப் பதிவு. (இ.எம்.ஆர் அமைப்பை செயல்படுத்துவதும் இம்முயற்சியில் அடங்கும் என்று, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
பரிசோதனை, நோயறிதல், சிகிச்சை செயல்முறையை அதிக துல்லியத்துடன் விரைவுபடுத்த ஏஐ உதவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிக நேரம் தேவைப்படும் வழக்கத்தில் உள்ள பரிசோதனை முறைகளைக் குறைக்கும் என்று டாக்டர் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.
'நான் எப்போதும் ஏ.ஐ பயன்பாட்டை ஆதரிப்பேன். நம்முடைய அடிப்படை இலக்கவியல் மயமாக்கல், நமது மின்னியல் மருத்துவ பதிவேட்டை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். அதுதான் அதன் முதுகெலும்பு. மேலும், பணியை ஏஐ மிகவும் எளிதாக்கும். நாம் அதைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும். என்றார் அவர்.
பயிற்சியளிக்கப்பட்ட இயந்திர கற்றல் அமைப்பு மூலம் புற்றுநோய் செல்களை முன்கூட்டியே அடையாளம் காணக்கூடிய புற்றுநோயியல் போன்ற பல்வேறு துறைகளில் ஏஐ பரவலாகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



