நம்பிக்கை ஒருமுறை உடைந்தால், அதை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம்! பெர்சாத்து குறித்து பாஸ்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 8: பெர்சாத்து  தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின், பாஸ் கட்சியுடன் நல்லுறவைப் பேணுவதில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், அரசியல் ஒத்துழைப்பு என்பது வார்த்தைகளால் அல்ல, செயல்களால் அளவிடப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி தெரிவித்துள்ளார்.

முகைதீன் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதில் உள்ள நேர்மையை தாம் சந்தேகிக்கவில்லை. இருப்பினும், புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்ட அரசியல் உறவுகளை, நேர்மறையான அறிக்கைகள் மூலம் மட்டுமே மதிப்பிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

முக்கியமான தருணங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலமாகவும் அவை அளவிடப்பட வேண்டும் என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

பெர்லிஸில் நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடுகையில், பாஸ் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் மந்திரி பெசார் பதவிக்கு ஒரு பெயரைப் பரிந்துரைத்த பெர்சத்துவின் நடவடிக்கை குறித்து கேள்விகள் எஞ்சியுள்ளதாக ஃபத்லி கூறினார்.

ஒரு அரச ஆணை தொடர்பான கூற்றுகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய சட்டப்பூர்வ பிரமாணப் பத்திரங்கள் (SDs) இருப்பது குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார், முரண்பட்ட தகவல்கள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

 கட்சித் தலைமையின் முன்னிலையில், மூன்று முன்னாள் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், அந்த சட்டப்பூர்வ பிரமாணப் பத்திரங்கள் இருப்பதை பாஸ் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான் குறித்து, பாஸ் அல்லது பிற பெரிகாத்தான் தலைமைகளுடன் கலந்தாலோசிக்காமல், பெர்சாத்துவின் அரசியல் குழுவின் முடிவைத் தொடர்ந்து பெரிகாத்தான் சட்டமன்ற உறுப்பினர்களிடையே கூட்டாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிலைப்பாடு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் பெரிகாத்தான் நேஷனலில் உள்ள கூட்டாளிகளிடையே நம்பிக்கையின் அளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

உறவுகள் தொடரலாம். ஒத்துழைப்பை வலுப்படுத்தலாம். இருப்பினும், நம்பிக்கை என்பது வேறு விஷயம்.

நம்பிக்கை, ஒருமுறை உடைந்தால், அதை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம் என்று அவர் கூறினார்.

பாஸ் எடுக்கும் எந்தவொரு முடிவும் தற்போதைய சூழ்நிலைகளை மட்டுமல்லாமல், கூட்டணிக்குள் நம்பிக்கையைச் சிதைத்த கடந்தகால நிகழ்வுகளையும் கருத்தில் கொள்ளும் என்று ஃபத்லி மேலும் கூறினார்.

பெரிகாத்தான் நேஷனலுக்குள் உள்ள தோழமை உணர்வை மீறுவதாகக் கூறப்படும் பெர்சாத்து கட்சியின் பல நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அக்கட்சியுடனான தனது ஒத்துழைப்பை மறுமதிப்பீடு செய்யும் என்று பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *