பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற மாணவர்களை ஊக்குவிப்பதா?கல்வி அமைச்சரை சாடினார் ரஃபிஸி!
- Muthu Kumar
- 13 Aug, 2025
கோலாலம்பூர், ஆக.13-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார். இப்ராஹிமுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதற்கும் அவருக்குத் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதற்கும் மாணவர்களை ஊக்குவித்ததற்காக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கை முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி நேற்று சாடினார்.
நாள் வாழ்த்துகள். "உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்று சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் மாணவர்களிடம் ஃபட்லினா கூறுவதைச் சித்திரிக்கும் காணொளியொன்று பரவலாகிக் கொண்டிருக்கிறது.
அன்வாருக்கு இம்மாதம் 10ஆம் தேதியன்று எழுபத்தெட்டு வயது நிறைவடைந்தது. பள்ளிகளில் அரசியலுக்கு இடமில்லை என்று
நேற்று திட்டவட்டமாக அறிவித்த ரஃபிஸி, குழந்தைகளின் கல்வியுடன் தமது சொந்த அபிலாஷைகளை ஃபட்லினா பிணைத்துக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார்.
அன்வாருடன் பாசம் கொண்டவராக இருந்து அவருக்குத் தமது விசுவாசத்தைப் புலப்படுத்த விரும்பினால், ஃபட்லினா ஓர் எளிதான அறிக்கையை வெளியிட்டாலே போதுமானது. அதில் மாணவர்களைச் சம்பந்தப்படுத்த வேண்டியதில்லை என்று தமது பாசத்தையும் காட்டும்படி எதிர்கால இதர தலைவர்களுக்கு விசுவாசத்தையும் கல்வியமைச்சர்கள் தங்கள் மாணவர்களை வலியுறுத்துவதற்கு இது ஓர் முன்னுதாரணமாக அமையலாம்.
எனவே, இத்தகைய நிகழ்வுகள் நடக்கக்கூடாது. அரசியல் கருத்துகளையும் தனிப்பட்ட கருத்துகளையும் தெரிவிக்க பள்ளிகளை ஒரு தளமாகப் பயன்படுத்தக் கூடாது என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான ரஃபிஸி கூறினார் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஃபட்லினா கல்வியை அரசியல்மயமாக்கி வருவதைக் கண்டு அவமானப்படுகிறேன் என்றார் அவர்.
ஃபட்லினா பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவரும் ஆவார்.பள்ளிகளில் அரசியல் செய்யக் கூடாது என்று இதர அரசியல்வாதிகளைக் குறைகூறும் உரிமை இனிமேல் பிகேஆர் உறுப்பினர்களுக்குக் கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



