பேரரசர் மற்றும் சுல்தான்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கிருஷ்ணன்)

ஈப்போ, செப் -

அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் இந்நாட்டின் பேரரசர் மற்றும் சுல்தான்களின் பாதுகாப்பை
அதிகப்படுத்த வேண்டும் என்று இந்நாட்டு மக்கள் தங்கள் வேண்டுகோளை மலேசிய போலீஸ்படைக்கு வைத்துள்ளனர்.

நேற்று ஈப்போவில் நடைபெற்ற 68 ஆவது தேசிய தின கொண்டாட்டத்தின் போது குறிப்பாக தேசிய கீதம் இசைக்கும் பொழுது ஒரு பெண்மணி பிரதான மேடையேறி பேராக் சுல்தானை தாக்க முயன்ற காட்சியை பேராக் வாழ்மக்கள் பெரிதும் சங்கடத்துடன் கருதி வருகின்றனர்.

எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் ஏற்படலாம் அல்லது நடக்கலாம். அதற்கு எந்நேரத்திலும் போலீஸ் தரப்பினர் தயாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதற்கு இந்த அசம்பாவிதம் தக்க சான்றாகும்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி அல்லது அப்பெண்மணி யின் வரலாறு எதுவானலும் சரி. அப்பெண்மணியின் நடவடிக்கைகள் நம்நாட்டு மக்களின் அவலநிலையை புலப்படுத்தியுள்ளது. குறிப்பாக,இந்நாட்டு மக்கள் சுல்தான்களை மதிக்கவில்லையா என்று கேள்வி எழுந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து பேராக் போலீஸ்படை தலைவர் பல விமர்சனங்கள் செய்தாலும் அவை யாவும் நம்மை திருப்திப்படுத்த இயலாது. போலீஸ்படையினரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கவனமாக செயல்பட்டிருந்தால் அந்த பெண்மணியை
மேடை ஏறும் போதே தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்பது மக்களின் குமுறலாகும்.

இந்நாட்டு போலீஸ்தரப்பினர் மீது மக்கள் நல்ல மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் மற்றும் இதர செயல்நடவடிக்கைகளை தடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள் போலீஸ் தரப்பினர். ஆகவே, இனிவரும் காலங்களில் ஈப்போவில் நடந்தேறிய சம்பவம் படிப்பினையாக போலீஸ் தரப்பினருக்கு அமைந்துள்ளதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *