ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா - போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்!

top-news
FREE WEBSITE AD

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஈரான் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தான் ஈரானுக்கு மருத்துவ உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. அதுமட்டுமின்றி ஈரானுக்கு உதவி செய்யும் வகையில் பொதுமக்கள் நன்கொடை வழங்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதனால் ஈரான் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஈரானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய இந்தியா முன்வந்துள்ளது.அதன்படி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதவிர இந்திய மக்கள் ஈரானுக்கு நன்கொடை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அக்கவுண்ட் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஈரானின் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ''ஈரானில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மக்கள் அளித்த வரும் ஆதரவிற்கும், மருத்துவ உதவிக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதரகம் நன்றி தெரிவித்து கொள்கிறது'' என கூறியுள்ளது.

மேலும் ஈரானுக்கு நன்கொடை வழங்க வேண்டிய அக்கவுண்ட் விவரங்களை இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் அனுமதியுடன் இந்த விவரம் வெளியாகி உள்ளதாம். இதனால் பொதுமக்கள் ஈரான் மக்களுக்கு உதவ நினைத்தால் அந்த வங்கி கணக்கு வழியாக நன்கொடை வழங்கலாம்.

இதுபற்றி இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் வழங்கி உள்ளது. அதில், ஈரானுக்கு நன்கொடை வழங்குவோர் இந்த வங்கி கணக்கு விவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற QR குறியீடுகள் மற்றும் யுபிஐ இணைப்புகளை நம்ப வேண்டாம். ஏனென்றால் அப்படியான ஒன்றை தூதரகம் அங்கீகரிக்கவில்லை. தூதரகத்தின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கு இதுமட்டும் தான். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில தொடர்ந்து ஆதரவளித்த வரும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *