பூச்சோங் ஜெயாவில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை! 6 இந்திய நாட்டு பிரஜைகள் கைது!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

பூச்சோங் ஜெயா, நவ 7: நேற்று இரவு தலைநகர் பூச்சோங் ஜெயாவில் ஆடவர் ஒருவர் கடையின் படிக்கட்டில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் இந்தியாவைச் சேர்ந்த நபர் என்றும் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் பணிபுரிந்த பாதிக்கப்பட்ட நபர், கடையில் ரோர் அறையில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு 8.30 மணியளவில் பொதுமக்களில் ஒருவர் உடலைக் கண்டுபிடித்ததை அடுத்து, விசாரணைக்கு  உதவ தேசிய காவல் துறையின் (K9) பிரிவின் மோப்ப நாய்கள் களமிறக்கப்பட்டன.

இதனை அடுத்து தீவிர தேடுதல் வேட்டை தொடங்கிய நிலையில் , இது தொடரக ஆறு இந்திய நாட்டைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செர்டாங் காவல்துறைத் தலைவர் ஃபாரிட் அகமது கூறினார்.

அறுவரும் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுத் தோழர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த ஆறு பேரும் இக்கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதுவரை, புகார்தாரர் உட்பட நான்கு சாட்சிகளின் வாக்குமூலங்கள் விசாரணைக்கு உதவுவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முக்கிய சந்தேக நபரான இந்திய பிரஜை ஒருவரையும் அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுயதொழில் செய்யும் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய 49 வயதான பாதிக்கப்பட்டவர், கடந்த 19 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருவதாக ஃபாரிட் அமாட் தெரிவித்தார்.

இந்நிலையில் கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, சம்பவ இடத்திலிருந்து சிசிடி காணொளி பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் ஃபாரித் மேலும் கூறினார். மேலும் சிசிடிவி காணொளிப் பதிவின் அடிப்படையில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது செர்டாங் காவல் தலைமையகத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *